உலகம்

கறி சாப்பிடுவதற்காக மாடுகளை வளர்க்கும் மார்க் ஜூக்கர்பெர்க்

Published On 2024-01-11 10:26 GMT   |   Update On 2024-01-11 10:26 GMT
  • உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.
  • பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவரும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில் மாடுகளை வளர்க்க தொடங்கி உள்ளேன். உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்கின் பண்ணையில் மாடுகளுக்கு மக்காடாமியா உணவுகளை சாப்பிட கொடுப்பதாகவும், குடிப்பதற்கு பீர் வழங்குவதாகவும் கூறி உள்ளார். மேலும் மாடுகளுக்கான பீர் பண்ணையிலேயே உருவாக்கப்பட்டு கொடுக்கப்படுவதாகவும், பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News