உலகம்

கூகுள் தேடலில் மீண்டும் உலா வரும் ஜெனிபர் லோபஸ்

Update: 2023-02-04 09:49 GMT
  • கூகுள் தேடலில் கடந்த 20 ஆண்டுகளாக ஜெனீபர் லோபஸ் படம் தொடர்ந்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
  • கிராமி விருதுகள் விரைவில் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜெனீபர் லோபஸ்சின் படங்கள் மீண்டும் உலா வர தொடங்கி உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெனீபர் லோபஸ். இவர் இசை பதிவு தயாரிப்பாளர், நடன கலைஞர், பின்னணி பாடகி என்று பன்முக தன்மை கொண்டவர்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டின் போது கிராமி இசை விருது நிகழ்ச்சியில் விருது பெற பங்கேற்றார். அப்போது அவர் பச்சை நிறத்தில் கவர்ச்சியான ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அந்த ஆடை உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பை பெற்றது.

கூகுள் தேடலில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த படம் தொடர்ந்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இணைய தள உலகில் அவரது படம் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கிராமி விருதுகள் விரைவில் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜெனீபர் லோபஸ்சின் படங்கள் மீண்டும் உலா வர தொடங்கி உள்ளன.

Tags:    

Similar News