உலகம்

சீனாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு- 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Published On 2022-09-06 11:05 IST   |   Update On 2022-09-06 11:05:00 IST
  • முதல் கட்ட தகவலில் 21 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
  • நிலநடுக்கத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் லூடிங் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவும் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

முதல் கட்ட தகவலில் 21 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

இவர்கள் லூடிங் நகரை சேர்ந்த 29 பேர், யாயன் நகரத்தை சேர்ந்த 17 பேர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News