உலகம்

சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி

Published On 2025-06-23 03:50 IST   |   Update On 2025-06-23 03:50:00 IST
  • தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்.
  • தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

டமாஸ்கஸ்:

சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News