உலகம்

சூடானில் நிலத்தகராறு - இரு தரப்பினர் இடையிலான மோதலில் 170 பேர் பலி

Published On 2022-10-21 00:50 IST   |   Update On 2022-10-21 00:50:00 IST
  • சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
  • நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டனர்.

புளூ நைல்:

சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.

தலைநகர் கார்ட்டூம் நகரில் இருந்து தெற்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ரோசிரெஸ் பகுதியருகே, வத் அல்-மஹி என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 170 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 86 பேர் வன்முறையில் காயமடைந்துள்ளனர். இதனை அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார்.

Tags:    

Similar News