உலகம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

Published On 2023-08-17 22:48 GMT   |   Update On 2023-08-17 22:48 GMT
  • கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது.

பொகோட்டா:

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Tags:    

Similar News