உலகம்

விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்து

Published On 2025-07-09 11:34 IST   |   Update On 2025-07-09 11:34:00 IST
  • இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செலஸ்டிஸ் நிறுவனம் செயல்படுத்தியது.
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் மன்னிப்பு கோரியது.

விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. 

Tags:    

Similar News