உலகம்

சேதமடைந்த கட்டிடம்

கெர்சன் நகரிலிருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் - ரஷிய அதிகாரிகள் உத்தரவு

Published On 2022-10-22 15:01 GMT   |   Update On 2022-10-22 15:01 GMT
  • உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
  • கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேறுங்கள் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீவ்:

உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது. எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷியாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News