உலகம்

உக்ரைன் ரஷியா போர்

உக்ரைனின் பிவோடல் நகரை கைப்பற்றியது ரஷியா

Published On 2022-07-03 19:12 GMT   |   Update On 2022-07-03 19:12 GMT
  • உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியது.
  • ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

மாஸ்கோ:

நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ கட்டமைப்புகளை தாண்டி அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், ஆலைகள் என தாக்குதல் வரம்பை ரஷியா நீட்டித்ததால் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷிய படைகள் ஏற்கனவே கைப்பற்றி விட்டன.

இந்நிலையில், லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி முக்கிய நகரமான பிவோடலை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே ஷோய்கு கூறுகையில், லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷிய படைகள் இணைந்து நடத்திய போரில் பிவோடல் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறியதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News