உலகம்

சமாதானம்!.. ராஜினாமா செய்தவரை 4 நாட்களில் மீண்டும் பிரதமராக நியமித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

Published On 2025-10-11 12:10 IST   |   Update On 2025-10-11 12:10:00 IST
  • பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார்.
  • பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.

பிரான்சில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 5 அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இதனால் பிரதமராக செயல்பட்ட பதவியை ராஜினாமா செய்வதாக அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரான்சின் பிரதமராக செபாஸ்டியன் லு கார்னௌயில் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு லு கார்னௌயில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறார் . கடந்த சில நாட்களாக மேக்ரோன் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள லு கார்னோ , அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தனது கடமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.

ஜூன் 2024 இல் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்து பிரான்ஸ் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் பிரான்சின் வளர்ந்து வரும் கடனை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளன.

 அதேவேளை, லு கார்னோவில்லின் மறு நியமனம், 2027 வரை நீடிக்கும் தனது அதிபர் பதவியை இழப்பதைத் தவிர்ப்பதற்கான மேக்ரோனின் கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது.  

Tags:    

Similar News