உலகம்
துப்பாக்கி சுடு நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு
அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு- லாஸ் ஏஞ்சல்சில் 2 பேர் பலி
- துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டார்கள்? என்பது உறுதி செய்யப்படவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக துப்பாக்கி சூடு சம்வங்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் கார் கண்காட்சி நடந்துகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் பார்க்கில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. எத்தனை பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள்? என்பதும் உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ளது.