உலகம்
ஜி20 மாநாட்டில் புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்த பிரதமர் மோடி
- ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
- ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.
ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.