உலகம்

பிரதமர் மோடி

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

Published On 2022-09-27 12:30 GMT   |   Update On 2022-09-27 12:30 GMT
  • டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
  • முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

டோக்கியோ:

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பேசினார்கள்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்தார்.

இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News