உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பஸ் மீது விமானம் மோதி விபத்து

Published On 2023-02-12 03:56 IST   |   Update On 2023-02-12 03:56:00 IST
  • அமெரிக்க விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் மீது விமானம் மோதியது.
  • இதில் பஸ்சில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு இந்த விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் மீது விமானம் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. எனினும் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News