உலகம்

பாகிஸ்தானில் நிவாரண பொருளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் சாவு

Published On 2025-08-16 04:47 IST   |   Update On 2025-08-16 04:47:00 IST
  • சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
  • அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது மோசமான வானிலை காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் விமானிகளைக் காப்பாற்றினர். அதற்குள் எதிர்பாரா விதமாக விமானம் வெடித்ததில் விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Tags:    

Similar News