உலகம்

(கோப்பு படம்)

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

Update: 2022-06-27 01:14 GMT
  • உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • தடுப்பூசிகள் இப்போது செயல் திறனை இழந்து விட்டன.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒரு ரோலர் கோஸ்டர் போல் செயல்படுவதாக, பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், தடுப்பூசிகள் இப்போது செயல்திறனை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News