உலகம்

இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

Published On 2025-06-25 14:56 IST   |   Update On 2025-06-25 14:56:00 IST
  • ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ளன.
  • அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவாத்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக அர்த்தமுளள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் ஷெபாஷ் ஷெரீப் டெலிபோனில் பேசியுள்ளார். அப்போது, "ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை, வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை ஆபசேரன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மே 10-ஆம் தேதி இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

ஆனால் சிந்து நதி நீர் சஸ்பெண்ட் போன்றவை தொடரும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News