உலகம்

எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அதிபர் டிரம்ப்

Published On 2026-02-18 04:54 IST   |   Update On 2026-02-18 04:54:00 IST
  • எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
  • அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

வாஷிங்டன்:

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து என்னை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என ஜெப்ரி எப்ஸ்டீன் போராடினார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News