உலகம்
பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
- 2023 ஆம் ஆண்டிடுக்குப்பின் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் (cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நவட்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.