உலகம்

உலகிற்கு தனது 3வது குழந்தையை வரவேற்றார் மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்- வைரலாகும் புகைப்படங்கள்

Update: 2023-03-24 19:28 GMT
  • மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார்.
  • மார்க் தனது குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது 3வது பெண் குழந்தையை வரவேற்றுள்ளார். மார்க் சுக்கர்பர்க் கடந்த 2012ம் ஆண்டு பிரிசில்லா சான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மார்க் ஜூக்கர்பர்க் தம்பதிக்கு சமீபத்தில் மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார்.

 அந்த பதிவில், "உலகிற்கு வருக அரேலியா சான் ஜூக்கர்பெர்க்! நீ எங்களின் சிறிய ஆசீர்வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மார்க் தனது பிறந்த குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் புகைப்படமும், பிரிசில்லா சான் குழந்தையை தன் மீது வைத்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News