உலகம்

அழகான முகம்... துப்பாக்கி போன்ற உதடுகள்: தனது பத்திரிகை செயலாளர் குறித்த டிரம்ப் பேச்சால் சர்ச்சை

Published On 2025-12-10 15:43 IST   |   Update On 2025-12-10 15:43:00 IST
  • பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசினார்
  • டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவார். அண்மையில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று டிரம்ப் கூறியது சர்ச்சையானது.

மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளன.

பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து பேசிய டிரம்ப், "இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார்" என்று பேசினார்.

டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Tags:    

Similar News