உலகம்

விடுமுறைக்காக வெளிநாடு சென்ற கனடா பிரதமர்: விமானம் மீண்டும் பழுதானதால் அதிர்ச்சி

Published On 2024-01-07 03:52 GMT   |   Update On 2024-01-07 03:52 GMT
  • விடுமுறைக்காக ஜமைக்கா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் பழுது ஏற்பட்டது.
  • கடந்த 3 மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.

ஒட்டாவா:

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். பயணம் முடிந்து ஜனவரி 4-ம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா சென்றது. பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானமும் கனடா திரும்பின. கடந்த ௩ மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.

ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News