உலகம்

ஒரே ஒரு விளம்பர வீடியோ.. கனடா செய்த குசும்பு.. டிரம்ப் தலைக்கேறிய கோபம் - 10% கூடுதல் வரி விதிப்பு

Published On 2025-10-26 11:37 IST   |   Update On 2025-10-26 11:37:00 IST
  • ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
  • கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.

இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News