உலகம்

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

Published On 2022-12-30 16:44 GMT   |   Update On 2022-12-30 16:45 GMT
  • மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று சைப்ரஸ் குடியரசு சென்றார்.
  • இதையடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

நிகோசியா:

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாளை வரை அவர் அந்நாட்டில் இருக்கிறார்.

இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது.

2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பெரிய மையங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம்.

உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்தாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 100 சதவீதம் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பயன்படுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News