உலகம்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்- போராளி குழு தலைவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழப்பு

Published On 2022-08-07 19:14 IST   |   Update On 2022-08-07 19:14:00 IST
  • காஸாவில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது.
  • எகிப்து தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெல் அவிவ்:

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. காஸாவில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே எகிப்து தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

Tags:    

Similar News