உலகம்

இனி இந்த நாட்டுக்கு இந்தியர்கள் விசா இல்லமால் பயணிக்கலாம்.. அசத்தல் சலுகை வழங்கிய நாடு!

Published On 2025-05-28 14:35 IST   |   Update On 2025-05-28 14:35:00 IST
  • அதன் பிரமிக்க வைக்கும் நீல நீர்நிலைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது.
  • இரண்டு வகையான விசா இல்லாத நுழைவு வசதிகளைப் பெறலாம்.

உலகின் கடைக்கோடியில் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் உள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் நீல நீர்நிலைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது.

இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்னம் இருப்பர். இந்நிலையில் இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின்படி, இந்திய பயணிகள் இரண்டு வகையான குறுகிய கால விசா இல்லாத நுழைவு வசதிகளைப் பெறலாம். இருப்பினும், இவை வெவ்வேறு தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளன.

14 நாள் விசா இல்லாத நுழைவு:

இந்தப் பிரிவின் கீழ், இந்திய குடிமக்கள் சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டும் எந்த விசாவும் இல்லாமல் பிலிப்பைன்ஸில் 14 நாட்கள் வரை தங்கலாம். இருப்பினும், இந்த விசா இல்லாத நுழைவை நீட்டிக்க முடியாது, அல்லது வேறு வகையான விசாவாக மாற்றவும் முடியாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

30 நாள் விசா இல்லாத நுழைவு:

இந்த வகை விசா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் போன்ற சில முக்கிய நாடுகளிலிருந்து ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதிகளை வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு 30 நாள் விசா இல்லாத தங்குதலை வழங்குகிறது.

மேற்கூறிய விசா இல்லாத நுழைவுக்கு இந்திய பயணிகள் தகுதி பெறவில்லை என்றால், அவர்கள் இ-விசா வழியைப் பயன்படுத்தலாம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக பிலிப்பைன்ஸ் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

Tags:    

Similar News