நேபாளம் வன்முறையில் இந்திய பெண் உள்பட 51 பேர் பலி: சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக வாய்ப்பு..!
- வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் தீவிர ஆலோசனை.
- குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்பு இருப்பதாக கூறப்பட்டது.
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர். இன்னும் வன்முறை ஓய்ந்த பாடில்லை.
இந்த வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் காசியாபாத்தை சேர்ந்தவர். மூன்று போலீசார் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இடைக்கால அரசு அமைத்து வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம், போராட்டுக்குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
முதலில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை தளபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நேபாள மின்சார ஆணையம் தலைவர் குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.