உலகம்

நேதாஜியின் படையில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் ஈஷ்வர் லால் சிங் மரணம்

Published On 2022-08-07 02:02 GMT   |   Update On 2022-08-07 02:02 GMT
  • இந்திய தூதரகம் ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
  • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார்.

சிங்கப்பூர் :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர், ஈஷ்வர் லால் சிங் (வயது 92). இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோசுடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவருடைய நெருங்கிய உறவினரான மெல்விந்தர் சிங் இதுபற்றி கூறும்போது, "ஈஷ்வர் லால் சிங் மரணத்தை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

அங்குள்ள இந்திய தூதரகம், ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 2019-ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்திய தேசிய ராணுவத்தில் சிங்கப்பூர், மலேசியாவை சேரந்த முக்கிய இனக்குழுக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News