உலகம்

மத்திய காசா மீது பயங்கர தாக்குதல்: 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published On 2023-12-25 02:47 GMT   |   Update On 2023-12-25 02:47 GMT
  • கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 15 பேர் பலி.
  • பாலஸ்தீனத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்

காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது.

தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News