உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசா எல்லையில் ஐ.நா. பள்ளி மீது தாக்குதல்.. 15 பேர் உயிரிழப்பு

Published On 2023-11-04 13:29 GMT   |   Update On 2023-11-04 13:29 GMT
  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
  • ஐ.நா.-வின் நான்கு பள்ளிகள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.

காசாவில் உள்ள ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உயிரிழந்தவர்கள் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனியர்கள் ஆவர்.

"இன்று காலை அல்-ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்," என்று சுகாதார துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கத்ரா தெரிவித்தார்.

முன்னதாக இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் ஐ.நா.-வும் எந்த தகவலும் வழங்கவில்லை.

காசா எல்லையில் உள்ள நான்கு ஐ.நா. பள்ளிகள் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்ததாக ஐ.நா.-வின் பாலஸ்தீனர்களுக்கான மீட்பு படை தெரிவித்து இருந்தது.

Tags:    

Similar News