உலகம்

 நைஜீரியா அதிபர் போலா டினுபு 

கிராமத்தில் புகுந்து துப்பாக்கிச்சூடு.. 40 பேர் உயிரிழப்பு - நைஜீரியாவில் பயங்கரம்

Published On 2025-04-15 11:49 IST   |   Update On 2025-04-15 11:49:00 IST
  • பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.
  • நைஜீரியா அதிபர் போலா டினுபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த  கும்பல் ஒன்று ஜைகே (ZIKE) எனப்படும் கிறிஸ்தவ விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் 40 பேர் பலியானார்கள். மேலும் பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.

இதுதொடர்பாக நைஜீரியா அதிபர் போலா டினுபு கூறும்போது, இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து, வன்முறைச் செயல்களைத் திட்டமிட்டதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறு வனங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

கிறிஸ்தவ சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Tags:    

Similar News