உலகம்

கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்ட எஸ்சிஓ வெளியுறவு மந்திரிகள்

Published On 2025-07-15 17:40 IST   |   Update On 2025-07-15 17:40:00 IST
  • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
  • கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்தார்.

பீஜிங்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.

இதற்கிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.

எஸ்சிஓ வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவு மந்திரிகள் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News