நேபாள முன்னாள் பிரதமரை கைது செய்ய வேண்டும் - ஜென் இசட் போராட்ட குழு வலியுறுத்தல்
- நேபாள இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
- நேபாள இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்நாட்டு ஜென் z இளைஞர்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
இதற்கிடையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
இந்நிலையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலியான சம்பவத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று ஜென் இசட் குழு வலியுறுத்தி உள்ளது.
ஆனால் துப்பாக்கி சூட்டுக்கு தான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கே.பி.சர்மா ஒலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.