உலகம்

பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை - அதிபர் மேக்ரான் அறிவிப்பு

Published On 2025-06-12 03:40 IST   |   Update On 2025-06-12 03:40:00 IST
  • இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
  • கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.

சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.

இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News