உலகம் (World)
சீனாவுக்கு உளவு பார்த்த ஓய்வு பெற்ற அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை... அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
- அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
- பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் யூக் சிங்க். சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் பிறந்து அமெரிக்கவில் குடியேறினார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் அலெக்சாண்டர் பணியில் இருந்தபோது அமெரிக்கா ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை ரகசியங்களை சீனாவுக்கு கசிய விட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அலெக்சாண்டர் தன்னுடைய பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்த அலெக்சாண்டருக்கு அமெரிக்கா கோர்ட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.