உலகம்

ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம்

Published On 2023-09-16 08:53 IST   |   Update On 2023-09-16 08:53:00 IST
  • ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 5-வது மக்கள்தொகை உச்சி மாநாடு நடைபெற்றது.
  • பல்கேரியா நாட்டின் அதிபர் ருமென் ராதேவை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து எரிசக்தி பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

புடாபெஸ்ட்:

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 5-வது மக்கள்தொகை உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இத்தாலி, பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பல்கேரியா நாட்டின் அதிபர் ருமென் ராதேவை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து எரிசக்தி பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இதனையடுத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களும் கையெழுத்திட்டன.

மேலும் இந்த உச்சி மாநாட்டில் தான்சானியா துணை அதிபர் பிலிப் எம்பாங்கோவிடம் சுற்றுலா, மீன்வளம், நீர் மேலாண்மை போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஹங்கேரி பிரதமரின் செய்தித்தொடர்பாளர் பெர்டலான் ஹவாசி கூறினார்.

Tags:    

Similar News