உலகம்

வங்களாதேச வன்முறை: சீனா, பாகிஸ்தான் இணைந்து நடத்திய ஆட்சி கவிழ்ப்பு சதி

Published On 2024-08-06 10:39 IST   |   Update On 2024-08-06 10:39:00 IST
  • இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்.
  • சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல்.

வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறை, ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத் துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது என்றும், இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காள தேசத்தின் தேசியவாத கட்சியை (பி.என்.பி.) ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.என்.பி. கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News