உலகம்

கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்

Published On 2025-04-04 20:48 IST   |   Update On 2025-04-04 20:48:00 IST
  • PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்ததும் பதிவாகி உள்ளது.
  • இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

 இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News