உலகம்

இங்கிலாந்தில் சேலை கட்டிக் கொண்டு 42 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய இந்திய வம்சாவளி பெண்

Published On 2023-04-20 11:06 GMT   |   Update On 2023-04-20 11:06 GMT
  • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
  • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

Tags:    

Similar News