உலகம்

நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published On 2023-02-24 05:17 IST   |   Update On 2023-02-24 05:17:00 IST
  • இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஜகார்த்தா:

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் டுபேலோ பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் 177 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News