உலகம்

ரஷியாவில் மாயமான விமானம் விழுந்து நொறுங்கியது: பயணம் செய்த 49 பேரும் உயிரிழப்பு..!

Published On 2025-07-24 12:44 IST   |   Update On 2025-07-24 14:47:00 IST
  • சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்தின் விமானம் மாயம்.
  • விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகள் இருந்தனர்.

ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு இன்று சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் இன்று ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 49 பேருடன் சென்று கொண்டிருந்தது.

விமானம் டிண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து திடீரென விலகியது. அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானத்தின் பாகங்கள் சீனா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News