உலகம்

ஜப்பானில் ரூ.28 கோடிக்கு ஏலம் போன ப்ளூஃபின் டுனா மீன் - இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2026-01-07 16:14 IST   |   Update On 2026-01-07 16:14:00 IST
  • ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
  • அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோயோசு சந்தையில் 243 கிலோ எடையுள்ள ப்ளூஃபின் டுனா மீன் ரூ.28 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. புத்தாண்டில் கிடைக்கும் முதல் மீன் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் நம்பப்படுவதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த மீனும் ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புளூஃபின் டுனா நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றது. சுமார் 40 வருடங்கள் வாழும் இந்த மீன் கடலின் ஆழத்திற்கு சென்று வேட்டையாடக்கூடியது. மிகப்பெரிய இந்த மீன் அரிதாகவே கிடைக்கிறது. மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இந்த மீன் வழங்குகிறது. அதனால் இந்த மீன் கோடிகளில் விலை போகிறது.


Tags:    

Similar News