உலகம்

தற்கொலை படை தாக்குதல்

ஆப்கன் பள்ளியில் தற்கொலைப் படைத்தாக்குதல் - பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

Published On 2022-10-03 23:28 GMT   |   Update On 2022-10-03 23:28 GMT
  • ஆப்கானிஸ்தான் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இதில் 46 மாணவிகளும் அடங்குவர்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News