52 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை: காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்
- கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
காசா:
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 1,17,600 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா.சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.