மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்- பயங்கரவாதிகள் அட்டூழியம்
- 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
- இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அடிக்கடி அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் மேற்கு மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்துக்குள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு, பணிபுரிந்து கொண்டிருந்த 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட இந்தியர்கள் மின்மயமாக்கல் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் 3 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.