உலகம்

சீனாவில் கனமழை: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

Published On 2025-07-29 20:59 IST   |   Update On 2025-07-29 20:59:00 IST
  • சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
  • சுமார் 80 ஆயிரம் பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பீஜிங்:

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை.

மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீனாவில் பெய்துள்ள கனமழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News