உலகம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து- 28 பேர் பலி

Published On 2022-08-16 12:21 GMT   |   Update On 2022-08-16 12:21 GMT
  • பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
  • பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன.

கராச்சி:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று எண்ணெய் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. முல்தான்-சிக்கூர் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிந்து மாகாணத்தின் கராச்சி சாலையில் ரோஹ்ரி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

சிந்து மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், வாகன உரிமம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சரியாக சோதனை செய்யாதது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Tags:    

Similar News