உலகம்
குரங்கம்மை

மெக்சிகோ- அயர்லாந்திலும் குரங்கம்மை பரவியது

Published On 2022-05-29 15:55 IST   |   Update On 2022-05-29 15:55:00 IST
20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 நாடுகளுக்கு குரங்கம்மை பரவி உள்ளது.

மெக்சிகோவில் முதன் முதலாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சென்று வந்திருந்தார். அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேபோல் அயர்லாந்து நாட்டிலும் குரங்கம்மை பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ஒருவருக்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்.. பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு
Tags:    

Similar News