உலகம்
அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல் - அந்தோனி அல்பானீஸ் வெற்றி

Published On 2022-05-21 19:58 GMT   |   Update On 2022-05-21 20:04 GMT
ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி தலைவரான ஸ்காட் மாரிசன் தோல்வி அடைந்தார்.
சிட்னி:

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

ஆஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் முலம் அந்தோனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது. 

Tags:    

Similar News