உலகம்
இலங்கை வன்முறை

இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது

Published On 2022-05-20 04:26 GMT   |   Update On 2022-05-20 04:26 GMT
இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு: 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. 

இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் வன்முறை தொடர்பாக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News